தமிழகத்தில் ஷவ்வால் மாதம் (ஹிஜ்ரி 1443) & நோன்பு பெருநாள் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான 01.05.2022 ஞாயிற்றுக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 02.05.2022 திங்கள்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்
வரும் 03.05.2022 செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்