டெல்லியில் 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் சங்பரிவார பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த ஊர்வலத்தின் போது ஜஹாங்கீர்பூர் என்ற முஸ்லிம்கள் பகுதிகளில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வார்த்தைகளை கோஷமிட்டும், அங்கே இருந்த பள்ளிவாசல் மீது கற்களை கொண்டு எரிந்தும் சங் பரிவார கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊர்வலம் வந்தவர்கள் கையில் கைத்துப்பாக்கியும், கொடிய ஆயுதங்களும் இருந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியும் வருகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது.
உள்துறை அமித்ஷா அவர்களின் கட்டுபாட்டில் உள்ள டெல்லி போலீசார் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு கலவரம் செய்த வன்முறை கும்பல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஜஹாங்கீர் பூர் பகுதியைச் சேர்ந்த 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கலவரம் ஏற்படுத்தி இந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடித்து தள்ள சங் பரிவார கூட்டத்தினர் ஏற்கனவே திட்டமிட்டு இருக்கின்றனர்.
முஸ்லிம்களை இதன் மூலம் அச்சபடுத்த வேண்டும் என்பது அவர்கள் திட்டம்.
டெல்லி பாஜக தலைவர் அஜேய் குப்தா மாநகராட்சிக்கு கடிதம் எழுதிய அடிப்படையில் இடிப்பு சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஒரு கடிதத்திற்கு இப்படியான நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இந்திய தேசம் பாசிச ஆட்சியாளர்களிடம் சிக்கி சின்னா பின்னாமாகி வருகிறது.
நீதிமன்றம் இடிப்பதற்கு தடை விதித்திருந்ததையும் மீறி புல்டோசர் மூலம் அனைத்தும் இடித்து தரை மட்டமாக்க பட்டு அவர்கள் கதறி அழும் காட்சிகள் பார்ப்பவரின் மனதை கலங்க வைத்துள்ளது. முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இதை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த சம்பவங்களை அரங்கேற்றியவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாக கண்டிக்கின்றது.
ஏழை முஸ்லிம்கள் மீது அரங்கேறிய இந்த அநியாயத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை பெற்று, களத்தில் எதிர்த்து நின்ற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
நீதிமன்றத்தின் உததரவை மீறி இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கலவரங்களை ஏற்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் தடை செய்ய பட வேண்டும். மதக்கலவரங்கள் மூலம் உலக அரங்கில் இந்தியர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தும் இந்நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஒன்றிய அரசு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.
இப்படிக்கு.
ஆர். அப்துல் கரீம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.