தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுரை மாவட்டம் சார்பாக
பாலஸ்தீனில் வாழும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கிரைம் பிரான்ச் பகுதியில் (7-6-2024) அன்று மாலை 4:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேலின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டும் விதமாக நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் நடுநிலையாளர்கள் பிற மத மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் அநியாயங்களை பதாகைகளாக ஏந்தி கொண்டு பொதுமக்கள் விண்ணை பிளக்கும் வகையில் கோஷமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
பாலஸ்தீனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் போல் வேடமிட்டு வந்த குழந்தைகளை பார்த்த பொதுமக்கள் பாலஸ்தீன் மக்களின் அவல நிலை குறித்து கலங்கி நின்றனர்.







