




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிளை 2 சார்பாக மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி,
அல்லாஹ்வின் உதவியால்
மார்க்க விளக்க கூட்டமாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்ச்சியில்
மாணவ, மாணவிகளின் பல்வேறு மார்க்க திறனாய்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து
சகோதரர் அபூபக்ர் சித்திக் சஆதி (TNTJ பேச்சாளர்) #மாநபிவழியே_மாபெரும்_வெற்றி என்ற தலைப்பிலும்
சகோதரர் நாகூர் யூசுஃப் M.I.Sc #வளமான_தலைமுறையை_வார்த்தெடுப்போம் என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள்.
கோடை கால பயிற்சி வகுப்பில் பயின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், வகுப்புகளின் இறுதியில் நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும்
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.